கேழ்வரகு இனிப்பு அடை
0
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - ஒரு ஆழாக்கு
தேங்காய்ப்பூ - அரை மூடி
வெல்லம் - 50 கிராம்
ஏலக்காய் - 3
நெய் - தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தை தூளாக்கி சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் கரையவிடவும். கரைந்தவுடன் ஆறவைக்கவும். மாவு, தேங்காய்ப்பூ, ஏலக்காய்ப்பொடி ஆகியவற்றுடன் வெல்லத்தண்ணீரை விட்டு பிசையவும்.
தோசைக்கல்லை சூடாக்கி நெய் தடவி மாவை தட்டவும். சுற்றிலும் நெய் விட்டு வெந்ததும் திருப்பிபோட்டு வேகவைக்கவும்.