கீமா இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மினி இட்லி - 15

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

கீமா - 1/4 கிலோ

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்த்தூள் - 1 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

வாணலியில் 2 கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் இஞ்சி பூண்டு, தக்காளி, சேர்க்கவும்.

பொன்னிறமாக வதங்கியதும் கீமாவை போடவும்.

இதோடு மஞ்சள்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

தேவையென்றாள் தண்ணீர் சேர்க்கவும். கீமா வெந்தவுடன் மினி இட்லியை சேர்க்கவும்.

கீமாவுடன் இட்லி சேர்ந்தவுடன் இறக்கவும்.

குறிப்புகள்: