காஷ்மீர் ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்

சலிக்காத கோதுமை மாவு - 200 கிராம்

கலக்கிய கெட்டி தயிர் - 3 தேக்கரண்டி

ப்ரெட் ஸ்லைஸ் - 1

பால் - 1/2 கப்

சீனி - 1 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதாவையும், சலிக்காத கோதுமை மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு, சீனி, பெருஞ்சீரகம், கலக்கிய கெட்டித்தயிர் அனைத்தையும் அத்துடன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ளவும்.

ப்ரெட் ஸ்லைஸை ஓரம் நீக்கி, பாலில் நனைத்து பிழிந்து, மாவில் உதிர்த்து போட்டுநன்றாக மாவை பிசையவும்.

தோசைக்கல்லை நன்கு சூடாக்கி, மாவை வார்த்து அதில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.

பிறகு இன்னொரு அடுப்பின்மேல் ஒரு க்ரில்லை வைத்து, நேரடி தனலில் இரண்டு பக்கமும் போட்டு தீயாமல் எடுக்கவும்.

குறிப்புகள்:

சப்பாத்தி குருமா போன்று செய்து சாப்பிடலாம்.