கார்ன் சாண்ட்விச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் துண்டுகள் - 4 அல்லது 6

வேக வைத்த கார்ன் - 3/4 கப்

கொத்தமல்லி - சிறிது

சாஸ் செய்ய:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

பால் - 100 மில்லி

மைதா - 1 தேக்கரண்டி

மிளகு மற்றும் உப்பு - சுவைக்கு

சர்க்கரை - 1/2 தேக்கரண்டி

துருவிய ப்ராசஸ்டு சீஸ் - 2 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு லேசாக சூடானதும் மைதா சேர்த்து கலந்து விடவும். மைதா நுரைக்க துவங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

இதில் பால், உப்பு, மிளகு தூள், சர்க்கரை, சீஸ் துருவல் சேர்த்து கலந்து விடவும்.

மீண்டும் அடுப்பில் வைத்து கை விடாமல் கிளறவும். பால் கெட்டியாகி க்ரீம் போன்ற பதத்துக்கு வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும்.

இதில் உப்பு சேர்த்து வேக வைத்த கார்ன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலந்து வைக்கவும்.

ப்ரெட் துண்டின் மேல் இந்த கலவையை வைத்து மேலே இன்னொரு ப்ரெட் துண்டு வைக்கவும்.

இதை தவாவிலோ அல்லது சாண்ட்விச் மேக்கரிலோ வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்:

கார்னை முதலிலேயே உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் பயன்படுத்தலாம்.

ப்ரெட் க்ரில் செய்யும் முன் நெய் / வெண்ணெய் தடவி செய்யலாம். பீன்ஸ், கேரட், பட்டாணி, கேப்ஸிகம் என உங்கள் விருப்பமான காய்களும் கலந்து செய்யலாம். காரத்துக்கு மிளகோடு சேர்த்து பச்சை மிளகாயும் பயன்படுத்தலாம்.