காய்கறி முட்டை தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசைமாவு - தேவையான அளவு

முட்டை - 4

கேரட் - 1/2 கப் (துருவியது)

உருளைக்கிழங்கு - 1/2 கப் (வேகவைத்து மசித்தது)

பட்டாணி - 2 தேக்கரண்டி(வேகவைத்து மசித்தது)

மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 பழம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முட்டையை உடைத்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கேரட்டை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பின் அதனுடன் பட்டாணியை போட்டு ஒரு வதக்கு வதக்கி கொஞ்சம் எண்ணைய் சேர்த்து உருளைக்கிழங்கை சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

பின் இவற்றை முட்டைகலவையில் போட்டு கட்டியில்லாமல் கலக்கவும்.

தோசைக்கல்லை காயவைத்து தோசையை ஊற்றி அதில் இந்த முட்டை கலவையை பரப்பி ஒரு தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: