காய்கறி நூடுல்ஸ்

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி நூடுல்ஸ் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 15

காய்ந்த மிளகாய் - 10

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 5 பல்

காய்கறிகள் (பீன்ஸ், முளைகட்டிய பயறு, காரட், குடைமிளகாய், லீக்ஸ், கோவா) - 2 கப்

சோயா சோஸ் - 2 மேசைக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸை பிரித்து வைக்கவும்.

உப்பு போட்டு கொதித்த நீரை நூடுல்ஸின் மேல் ஊற்றி 3 நிமிடம் மூடி வைக்கவும்.

பின்பு வடித்து தட்டில் கொட்டி பரவி ஆறவிடவும்.

சின்ன வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

இதில் காய்கறிகளைச் சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

தீயைக் குறைத்து சோயா சோஸ், உப்பு சேர்த்து கலக்கவும்.

பின்பு வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து மெதுவாக கலக்கவும் அடுப்பை அணைத்து எலுமிச்சைச்சாறை சேர்த்து கலந்து இறக்கவும்.

குறிப்புகள்: