காய்கறி இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

புழுங்கல் அரிசி - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1/2 கப்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

காரட் - 2

பீன்ஸ் - 10

முட்டைகோஸ் - 100 கிராம்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 4

மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, புழுங்கல் அரிசியை ஒன்றாகவே ஊறவைக்கவும். உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தை சேர்த்து மூன்று அல்லது நான்கு மணிநேரம் ஊறியதும் எடுத்து கல் நீக்கி, கழுவி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரிசியை சற்று கரகரப்பாகவும், உளுந்தை வெண்ணெய் போன்றும் அரைத்து ஒன்றாய் கலந்து வைத்து விடவும். மறுநாள் காலையில் எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.

பொடியாக நறுக்கிய காய்கறிகளில் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு நெய்யோ, எண்ணெய்யோ விட்டு கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வேக வைத்திருக்கும் காய்கறிகள் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

வதக்கும் பொழுது லேசாக நீர் தெளிக்கவும். கடைசியில் நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.

தயார் செய்து வைத்திருக்கும் இட்லி மாவை எடுத்து, அதில் காய்கறி கலவையைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும்.

இட்லி தட்டுகளில் அளவாக நிரப்பி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: