காஞ்சிபுரம் இட்லி
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சை அரிசி - 1 கப்
உளுந்தம் பருப்பு - 1 1/2 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிபருப்பு - 10
மிளகு - 1 தேக்கரண்டி
ஜீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - தேவையான அளவு
எண்ணை - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு தனித்தனியாக ஊறவைத்து (2 - 3 மணி நேரம்) மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.
எண்ணயில் கடுகு, கடலைபருப்பு, முந்திரி, மிளகு, ஜீரகம், பெருங்காயம் தாளித்து ஆறியதும் மாவில் சேர்க்கவும். உப்பையும் சேர்க்கவும்.
இட்லி தட்டுகளின் குழிகளுக்குத் தக்கபடி, வாழை இலை அல்லது மந்தார இலையை துண்டு செய்து இவைகளை லேசாக ஆவியில் அல்லது தணலில் வாட்டி தட்டில் வைத்து ஊற்றி வேக வைக்கவும்.
அல்லது டம்ளர்களில் பாதியளவு மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கலாம். டம்ளர்களில் ஊற்றுவதற்கு முன் எண்ணெய் பூசிக் கொள்ளவும்.
குறிப்புகள்:
தக்காளி சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.