கறிவேப்பிலை இடியாப்பம்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

இடியாப்ப மாவு - 2 கப்

கறிவேப்பிலை - 2 கைப்பிடி

துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் - 4

புளி - ஒரு சிறிய துண்டு

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மாவை இடியாப்பங்களாகப் பிழிந்து, சிறிது நீர்மோர் தெளித்து உதிர்த்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அதில் கறிவேப்பிலை, தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், புளி ஆகியவற்றை இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி, ஆறியதும் அரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் காயவிட்டு அதில் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து அரைத்த மசாலாவுடன் சேர்க்கவும்.

கடைசியில் தேவையான அளவு உப்பு, உதிர்த்த வைத்துள்ள இடியாப்பம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்: