கம்பு தோசை
0
தேவையான பொருட்கள்:
கம்பு - 2 கப்
இட்லி அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
காய்ந்த மிளகாய் - 4
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இனுக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கம்புடன் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து களைந்து 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
நன்கு ஊறியதும் அரைக்கவும். பாதி மசிந்ததும் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்து எடுத்து, மாவை 5 மணி நேரம் புளிக்கவிடவும்.
பிறகு தோசைக் கல்லை சூடாக்கி மாவை தோசையாக வார்த்தெடுக்கவும். சுவையான, சத்தான கம்பு தோசை தயார்.
குறிப்புகள்:
அனைத்து வகையான சட்னியும் இதற்கு ஏற்றதாக இருக்கும்.