ஓட்ஸ் ரவா தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 2 கப்

ரவா - 1 கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1

பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி

கருவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒட்சில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கலக்கவும்.

அடுத்து ரவா ,பெரியவெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி எல்லாவற்றையும் ஓட்சுடன் சேர்த்து நன்றாக கலக்கி 10 நிமிடம் ஊற வைக்கவும்..

தோசைகல்லை காயவைத்து இக்கலவையை தோசையாக சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: