ஓட்ஸ் பொங்கல்
4 - Ok!
2 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/2 கப்
பாசி பருப்பு - 1/2 கப்
முந்திரி - 6
சீரகம், மிளகு - 1 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசி பருப்பை 10 நிமிடம் ஊற வைக்கவும். பின் பாசி பருப்பை மலர வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் ஓட்ஸை போட்டு 5 நொடி வதக்கவும்.
பின் கால் கப்க்கு குறைவாக நீர் ஊற்றி ஓட்ஸை வேக வைக்கவும்.
ஓட்ஸ் குழைந்து வரும் போது, வேக வைத்த பாசி பருப்பு, உப்பு போட்டு சுருள கிளறவும்.
நெய்யில் சீரகம், மிளகு, முந்திரி சேர்த்து பொரித்து சேர்க்கவும்.
சுவையான ஓட்ஸ் பொங்கல் தயார்.