ஓட்ஸ் பணியாரம்
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
வர மிளகாய் - 8
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2
பச்சை மிளகாய் - 6
கறிவேப்பிலை - கொஞ்சம்
கொத்தமல்லித் தழை -கொஞ்சம்
இஞ்சி, சீரகம் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பருப்பு வகைகளை 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் தேவையான உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
ஓட்ஸ் மற்றும் வரமிளகாயை நைசாக பொடி செய்து கொள்ளவும்.
இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக கலந்து அதனுள் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, இஞ்சி, சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி, அதில் இந்த மாவு கலவையை ஊற்றவும். இருப்புறமும் பணியாரத்தை வேகவிட்டு எடுக்கவும்.