உளுந்து தேங்காய் புட்டு

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1 கப்

பச்சரிசி - 1/4 கப்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்துடன் வெந்தயம் சேர்த்தும், அரிசியையும் தனித்தனியே 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

உளுந்தை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.(மாவு பொங்க பொங்க அரைக்க வேண்டியதில்லை)

அரிசியை தனியே மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.

இந்த கலவையிலிருந்து எலுமிச்சையளவு எடுத்து தட்டில் பரப்பிய தேங்காயில் பிரட்டி எடுக்கவும்.

இப்படியே எல்லா மாவிலும் செய்து இட்லி தட்டில் ஆவியில் வேக வைக்கவும். கத்தியால் வெட்டி பார்த்து வெந்தது உறுதியானதும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

சர்க்கரை அல்லது இட்லிமிளகாய் பொடியுடன் பரிமாறவும்.

கோழிக்குழம்பு அல்லது மட்டன் குழம்பு கூட சுவையாக இருக்கும்.