உப்புமா மிக்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 2

கடுகு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

தாளிப்பு உளுந்து - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

மிளகாய் வற்றல் - 6

எண்ணெய் - 6 மேசைக்கரண்டி

செய்முறை:

ரவையை வாணலியில் போட்டு மணம் வரும் வரை வறுக்கவும்

வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து சிறு தீயில், வெங்காயம் பிரவுன் நிறம் வந்து கிரிஸ்பியாகும் வரை வறுக்கவும்.

கிள்ளிய மிளகாய் வற்றல் சேர்க்கவும்..

வறுத்த ரவையை போட்டு கிளறி இறக்கவும்.

இதனை டப்பாவில் போட்டு வைத்தால் 10, 15 நாள் வரை கெடாமல் இருக்கும்.

தேவைப்படும் பொழுது 1 கப் ரவைக்கு 2 1/4 கப் நீரை கொதிக்க வைத்து ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறி உப்புமா செய்யவும், உப்புடன் மேலும் சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்புகள்: