உடனடி உளுத்தம் மாவு தோசை
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
உளுத்தம் மாவு (வறுகாதது) - 1 கப்
எண்ணெய் - சுடுவதற்கு தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமைமா, உளுத்தம்மா, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு (தோசைமாவு பதம்) கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் காயவைக்கவும். அது நன்கு சூடானதும் அதில் எண்ணெய் தடவவும்.
அதன் பின்பு அதில் மாவை ஊற்றி பரத்தி விடவும். தோசை வெந்தவுடன் தோசையை திருப்பி விடவும்.
அதன் பின்பு தோசை வெந்ததும் எடுக்கவும்.
குறிப்புகள்:
இந்த தோசைக்கு, சட்னி நன்றாக இருக்கும்.