இனிப்பு பரோட்டா
0
தேவையான பொருட்கள்:
பரோட்டா - 1
சர்க்கரை - 1/2 கப்
நசுக்கிய ஏலக்காய் - 2
நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி
நெய்யில் வறுத்த முந்திரி - 10
நெய்யில் வறுத்த உலர்ந்த திராட்சை - 10
செய்முறை:
பரோட்டாவை நன்கு பொடிதாக பிய்த்து போடவும்.
சர்க்கரையை 1/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு முன்னால் இறக்கி விடவும்.
பிய்த்து போட்டு பரோட்டாவை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் இந்த சர்க்கரை பாகில் கொஞ்சம் ஊற்றி ஒரு கிளறி பின் மேலே முழுவதையும் ஊற்றவும்.
அதன் மேலே தேங்காய் துருவல், முந்திரி, திராட்சையை அலங்கரித்து கொடுக்கலாம்.
குறிப்புகள்:
தேங்காய் துருவல் கலர்கலராகவும் யூஸ் பண்ணலாம்.