இட்லி சாண்ட்விச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இட்லி - 5

உடைத்த கடலை - 1 மேசைக்கரண்டி

மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி

பூண்டு - 3 பல் (தோலுடன்)

கொத்தமல்லி இலை - 1/2 கப்

எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உடைத்த கடலை, மிளகாய்ப்பொடி, பூண்டு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

அதனுடன் எண்ணெய் சேர்த்து கலந்துக் கொள்ளவும். இட்லியை பக்கமாக கத்தியில் வெட்டி கொள்ளவும். இரண்டாக அல்லாமல் கொஞ்சம் ஒட்டி இருக்க வேண்டும்.

அனைத்து இட்லியின் இடையிலும் பொடியை நன்றாக தடவி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: