இடியாப்பம் பிரியாணி
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் - 10 அல்லது 15
சின்ன உருளைக்கிழங்கு - 2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
காலிஃப்ளவர் - 4 அல்லது 5 துண்டு
காரட் - 1
முட்டைகோஸ் - 1/2 கப்
இஞ்சி - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
கிராம்பு - 3
பட்டை - ஒரு சிறு துண்டு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லி, சீரகம், மிளகு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை சுத்தம் செய்து சதுரமாக வெட்டி அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி, உப்பு போட்டு 10 அல்லது 15 நிமிடம் வைக்கவும்.
இடியாப்பத்தை சின்ன துண்டுகளாக பிய்த்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து சூடு வந்ததும் உருளைக்கிழங்கை அதில் போட்டு வறுக்கவும்.
வெங்காயத்தை பொன்னிறமாக வறுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கிராம்பு போட்டு வறுக்கவும்.
காலிஃப்ளவர், காரட், முட்டைக்கோஸ் இவைகளை சேர்க்கவும். மீதி உள்ள உப்பை இஞ்சியில் கலந்து சமைக்கவேண்டும். இடியாப்பம் எல்லாவற்றையும் அதில் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை வறுத்துக் கொள்ளவும்.
பிறகு முட்டையில் இடியாப்பத்தை கலந்துக் கொள்ளவும். அதில் வாசனைப் பொருட்களைக் கலந்து அடுப்பில் இருந்து எடுக்கவும்.