ஆப்ப மாவு குழிப்பணியாரம்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஆப்ப மாவு - ஒரு கிண்ணம்

தோசை மாவு - 3/4 கிண்ணம்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

தாளிக்க:

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையானவைகளையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

இரண்டு மாவையும் ஒன்றாக ஒரு கிண்ணத்தில் ஊற்றி வதக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் கலவையை போட்டு நன்றாக கலக்கவும்.

குழிசட்டியை அடுப்பில் வைத்து குழியின் பாதிக்கு எண்ணெய் ஊற்றி ஒரு சின்னகரண்டியால் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பணியாரம் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வேக வைக்கவும்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும்.