ஆப்பிள் பனானா சாண்ட்விச்
0
தேவையான பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 6
ஆப்பிள் - 1
வாழைப்பழம் - 1
கரகரப்பாக பொடித்த மிளகு - 1 தேக்கரண்டி
வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ப்ரெட் ஸ்லைஸின் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவவும். ஆப்பிள், வாழைப்பழத்தினை ஸ்லைஸ் செய்யவும்.
ப்ரெட்டின் வெண்ணெய் தடவாத பக்கத்தில் ஆப்பிள் மற்றும் வாழைப்பழ ஸ்லைஸ்களை பரவலாக வைத்து மேலே மிளகு தூள் தூவவும்.
மற்றொரு ப்ரெட் ஸ்லைஸின் வெண்ணெய் தடவிய பக்கம் மேலே இருக்குமாறு பழங்களின் மேல் வைக்கவும்.
இதனை சாண்ட்விச் டோஸ்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.