அவல் உப்புமா (3)
தேவையான பொருட்கள்:
அவல் - 1 கப்
சின்ன அல்லது பெரிய வெங்காயம் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
தக்காளி - 1
பச்சை மிளகாய் -5
மிளகாய் வற்றல் - 3
கடலைப்பருப்பு பொடி - 3 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு பொடி - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கடுகு - தாளிப்பதற்கு
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி
டொமேட்டோ கெட்சப் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவலை 10 நிமிடம் அல்லது 5 நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு வெடிக்க விடவும்.
மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் போட்டு வதக்கி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
சிவந்ததும் தக்காளி போட்டு கரையும் வரை வதக்கவும்.
சிறிது உப்பு சேர்த்து இரண்டு பொடிகளையும் சேர்த்து வதக்கி கருகுவதற்குள் சில்லி சாஸ் விட்டு வதக்கி டொமேட்டோ கெட்சப் சேர்த்து வதக்கி அவலை நன்கு பிழிந்து சேர்க்கவும்.
அவல் அடுப்பில் இருக்கும் கலவையுடன் நன்கு சேருமாறு பிரட்டி விட்டு ஒரு நிமிடம் வேக விடவும்.
வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு தேங்காய் துருவல் தூவவும்.