அரிசி உப்புமா (4)
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 250 கிராம்
பாசிப் பருப்பு - 50 கிராம்
வெங்காயம் - 1/4 கிலோ
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - 25 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் கலந்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அதில் நறுக்கின பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.
பிறகு அரிசி, பருப்பு இரண்டும் சேர்த்து வேகவைத்து கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழைகளை போட்டு இறக்க வேண்டும்.