அரிசி அடை
0
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 ஆழாக்கு
பச்சைமிளகாய் - 4
இஞ்சி - ஒரு துண்டு
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசிமாவுடன் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை போட்டு கிளறி, தண்ணீரை கொதிக்கவிட்டு மாவில் ஊற்றி கரண்டியால் கிளறவும்.
கையில் உருட்டும் அளவிற்கு பிசைந்து ஒரு இலை அல்லது ப்ளாஸ்டிக்கவரில் எண்ணெய் தடவி மாவை எலுமிச்சையளவு உருட்டி எண்ணெய் தொட்டு வட்டமாக தட்டி தோசைக்கல்லில் போட்டு குறைந்த தீயில் வேகவைக்கவும்.
குறிப்புகள்:
சட்னி தொட்டு சாப்பிடலாம். சட்னி இல்லாமலும் சாப்பிடலாம்.