அரிசிமாவு ரொட்டி (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசிமாவு - 3 கப்
துருவிய தேங்காய் - 1/2 மூடி
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
மல்லி இலை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
அடுப்பில் சட்டியை வைத்து மாவை போட்டு மிதமான சூட்டில் வறுக்கவும்.(மாவு சிவக்க கூடாது)
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை லேசாக வதக்கவும்.
மாவுடன் வதக்கிய வெங்காயம், துருவிய தேங்காய், உப்பு, மல்லி இலை, கறிவேப்பிலை, மிளகாய் சேர்க்கவும்.
தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். (கொஞ்சம் இளக்கமாக)
பிளாஸ்டிக் கவரில் லேசாக எண்ணெய் தடவி மாவை சப்பாத்தி உருண்டையை விட கொஞ்சம் பெரிதாக எடுத்து தட்டவும்.
அடுப்பில் தவாவை வைத்து ரொட்டியை போட்டு எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் இருபக்கமும் திருப்பிப் போட்டு சுடவும். (ரொட்டியின் நடுவில் தோசைதிருப்பியால் லேசாக கீறவும் சீக்கிரம் வேகும்)
குறிப்புகள்:
இதனுடன் மீன் குழம்பு, கறி குழம்பு வைத்து சாப்பிடலாம்.