அடை (2)
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி – 2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
கடலை பருப்பு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 5
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 4 இலை
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
அரிசி மற்றும் பருப்பு வகைகளை சுத்தம் செய்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சுத்தம் செய்த அரிசி மற்றும் பருப்பு வகைகளை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 - 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஊறியதும் காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பில்லை, சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை அரைத்து வைத்துள்ள கலவையில் சேர்த்து நன்றாக கலக்கி ஒரு மணி நேரம் வைக்கவும்.
பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து அதில் கலந்து வைத்திருக்கும் மாவை சிறிது கனமான அடைகளாக ஊற்றி மிகவும் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
ஒரு பக்கம் நன்றாக வெந்த பின்னர் மறு பக்கம் திருப்பி போட்டு வேக விடவும்.
சுவையான அடை ரெடி
குறிப்புகள்:
சாம்பார் வெங்காயம் உபயோகித்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
சட்னி அல்லது சர்க்கரை உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.