அடை தோசை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்

துவரம் பருப்பு - 3/4 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

உளுந்து - 1/4 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

மிளகாய் வற்றல் - தேவைக்கு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

அரிசி, பருப்பை 3 - 4 மணிநேரம் ஊற வைத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு கலந்து வைக்கவும். புளிக்க தேவையில்லை.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மாவில் சேர்க்கவும்.

நன்றாக கலந்து தோசையாக ஊற்றி, எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு சிவக்க எடுக்கவும்.

குறிப்புகள்: