வெந்தய கீரை சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெந்தய கீரை - 1 கட்டு

துவரம் பருப்பு - 1/2 கப்

வெங்காயம் - 1

புளி - நெல்லிகாய் அளவு

தக்காளி - 3

சாம்பார் தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

பெருங்காய தூள்- 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவைகேற்ப்ப

தாளிக்க:

எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:

கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.

புளியை நல்ல திக்காக கரைத்து வடிகட்டி வைக்கவும்.

பருப்பை வேகவைத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம்,

தக்காளியை போட்டு வதக்கவும்.

நறுக்கி வைத்துள்ள கீரையையும் போட்டு வதக்கி அதில் உப்பு

மஞ்சள்தூள், மிளகாய் தூள், தனியா தூள் போட்டு வதக்கி

புளி தண்ணிரையும் விடவும்.

பாதி வெந்த பின் மீண்டும் கொஞ்சம் தண்ணிர் விட்டு

சாம்பார் தூளையும் போட்டு கொதிக்க விடவும்.

நன்றாக பச்சை வாசனை போன பின் தாளிக்கயுள்ளதை போட்டு தாளித்து பரிமாறவும் .

குறிப்புகள்: