மசூர் தால்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முளைக்கட்டிய மசூர் பருப்பு - 1/4 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி விழுது - சிறிது

எலுமிச்சை - 1

கொத்தமல்லி - சிறிது

நெய், கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பை நன்கு கழுவி ஊற வைக்கவும். வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

பின்பு பருப்புடன் இஞ்சி, பச்சைமிளகாய், தக்காளி, பூண்டு, பெருங்காயம் சேர்த்து வேக வைக்கவும்.

வானலியில் நெய் சேர்த்து தாளிக்க வேண்டியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றை பருப்பு கலவையில் போட்டு உப்பு, கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைக்கவும்

சாப்பிடும் முன் எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்: