பாசிப்பருப்பு சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

சிறிய வெங்காயம் - 10

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

தக்காளி - 1

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி தழை - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியை எட்டாக நறுக்கவும்.

புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.

பாசிபருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

வெந்ததும் நன்றாக மசித்து விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, புளிகரைசல் சேர்த்து வேக விடவும்.

வெங்காயம் வெந்து சாம்பார் திக்கானதும் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: