கத்திரிக்காய் இட்லி சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 1/4 கிலோ

துவரம் பருப்பு – 1 கப்

வெங்காயம் – 1

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 3

கறிவேப்பிலை – 3 இலை

கடுகு – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

எண்ணெய் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பினை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் துவரம் பருப்பு, நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய், வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு மற்றும் பச்சை மிளகாய் போடவும்.

இவை அனைத்துடனும் 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

குக்கரின் ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு கரண்டியை வைத்து மசித்து விடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றை வேக வைத்து மசித்து வைத்திருக்கும் காய்களுடன் போட்டு கிளறி விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.