அரைத்து விட்ட சாம்பார்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய முள்ளங்கி - 2

துவரம் பருப்பு - 75 கிராம்

தனியா - 2 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் வத்தல் - 8

தேங்காய் துருவல் - 5 மேஜைகரண்டி

புளி தண்ணீர் - 150 கிராம்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

கருவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி தனியா கடலை பருப்பை சிவக்க வறுத்துக் கொண்டு கடைசியில் மிளகாய் வத்தலை வறுக்கவும்.

இவைகளுடன் தேங்காய் துருவல், தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

முள்ளங்கியை வட்டமாக அரிந்து கொண்டு, துவரம் பருப்பையும் முள்ளங்கியையும் குக்கரில் வேகவைக்கவும்.

புளித்தண்ணீரில் அரைத்த விழுது, வேகவைத்த முள்ளங்கி, மஞ்சள் பொடி, தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

சாம்பார் நன்கு கொதி வந்தவுடன் வெந்த பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும்.

ஒரு கொதி வந்தவுடன் கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: