ஹோட்டல் கார சட்னி
5 - Good!
3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பூண்டு (தோலுரித்தது) - 25 என்னம்
சின்ன் வெங்காயம் (தோலுரித்தது) - 10 என்னம்
மிளகாய் வத்தல் - 25 என்னம்
கறிவேப்பிலை - 1 இனுக்கு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
நல்லெண்ணைய் - 1/4 கப்
கடலைஎண்ணைய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
பூண்டு,வெங்காயம்,கறிவேப்பிலை,வத்தல்,உப்பு சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவும்.
வாணலியில் கடலை எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த சட்னியை ஊற்றி ஒரு கொதி வந்த்தும் நல்லெண்ணைய் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
சிம்மில் வைத்து 5 நிமிடத்திற்குப் பிறகு ஒரு கிளறு கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு கொதிக்க வேண்டும்.
காரமான ஹோட்டலில் தயாரிக்கப்படும் காரசட்னி ரெடி.