வேர்கடலை சட்னி (1)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேர்கடலை - 1 கோப்பை

துருவிய தேங்காய் - 1/2 கோப்பை

புளி - கொட்டைப்பாக்களவு

பூண்டு - 2 பற்கள்

காய்ந்தமிளகாய் - 6

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

காய்ந்தமிளகாய் - 2

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்புத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

வேர்கடலையை சிவக்க வறுத்து ஆற வைத்து அதன் தோலை நீக்கிவிடவும்.

வேர்கடலையை வறுக்கும் பொழுதே காய்ந்தமிளகாயையும், ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

பிறகு அரவை இயந்திரத்தில் முதலில் தேங்காய், காய்ந்தமிளகாய், புளி, பூண்டு, உப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு சிறிது நீரைச் சேர்த்து அரைக்கவும்.

பிறகு கடலையை கொட்டி மேலும் சிறிது நீரைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கோப்பையில் வழித்து வைத்துக் கொள்ளவும். தேவையான பதத்திற்கு நீரை ஊற்றி கலக்கிக் கொள்ளவும். சற்று கெட்டியாக இருந்தால் ருசி கூடுதலாக இருக்கும்.

ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காய வைத்து தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து சட்னியின் மீது கொட்டவும்.

குறிப்புகள்:

சுவையான வேர்கடலை சட்னி இட்லி, தோசைக்கு ஏற்ற பக்க உணவு.