வெஜிடபிள் சட்னி செய்முறை
0
தேவையான பொருட்கள்:
ஏதாவதோரு காய் கறி - 100 கிராம்
மிளகாய் வத்தல் - 4
பூண்டு - 3 பல்
தக்காளி - 1
புளி - 2 கொட்டை
புதினா - 20 இலைகள்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - சிறு துண்டு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை விட்டு வத்தலை வறுத்து தனியாக எடுத்து கொண்டு அதே எண்ணெயில் வெங்காயம்,காய்,தக்காளி,புதினா,ஆகியவற்றை வதக்கி இதனுடன் பூண்டு,உப்பு,தேங்காயுடன் வத்தலை சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் அரைத்ததை கொட்டி கடுகு,உளுந்தம் பருப்புடன் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.