வெங்காயம் தக்காளி சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப் ( அல்லது) 1 பெரிய வெங்காயம்
தக்காளி - 1
காய்ந்தமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிது
புளி - கொட்டை பாக்கு அளவு
தேங்காய்துறுவல் - 2 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம்,தக்காளி நறுக்கிவைக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயம்,கறிவேப்பிலை,பூண்டு,மிளகாய் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
தேங்காய்துறுவல், புளி, உப்பு சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைக்கவும்.