பூண்டு மிளகாய் பொடி
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பூண்டு - 1 கப்
வர மிளகாய் - 15
புளி - கோலி அளவு
எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணை விட்டு வரமிளகாயை நிறம் மாறாமல் வறுத்துக்கொள்ளவும்
மிக்ஸியில் உப்பு, புளி, வரமிளகாய் சேர்த்து பொடிக்கவும்.
மிளகாய் நன்றாக பொடிந்ததும் பூண்டை சேர்த்து பொடிக்கவும்
அரைத்ததும் சேர்ந்தால் போல் இருக்கும் இந்த பொடி 2 நாள் வைத்திருந்தால் காய்ந்து பொடி போல் ஆகும்
குறிப்புகள்:
இட்லி, வெந்தய தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.