பூண்டு சட்னி (4)
தேவையான பொருட்கள்:
பூண்டு - 10 பல்
உளுந்தம்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
புளி - அரை நெல்லிக்காய் அளவு
தேங்காய் - 2 சில்லு
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒருகடாயை எடுத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் உளுந்தம் பருப்பை போட்டு பொரிய விடவும்
உளுந்தம்பருப்பு சற்று சிவந்ததும் அதில் கடுகு, காய்ந்தமிளகாய் சேர்த்து வதக்கவும்
பிறகு அதில் புளி, பூண்டு சேர்த்து பூண்டு சற்று சிவக்கும் வரை வதக்கி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
சற்று ஆறவிட்டு தேங்காய் சேர்த்து மை போல அரைத்து கொள்ளவும்
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை பொட்டு பொரித்து சட்னியில் கொட்டி பறிமாரவும்
தேவைப்பட்டால் தாளிக்கும் முன் ச்றிது தண்ணீர் விட்டு கரைத்தும் தாளிக்கலாம்
குறிப்புகள்:
இது இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்