புளிச்சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் (நறுக்கியது) - 1

தக்காளி (நறுக்கியது) - 4

காய்ந்த மிளகாய் - 5

தேங்காய் துருவல் - 1/2 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - தாளிக்க

பெருங்காயம் - சிறிதளவு

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் பெரிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், சீரகம், புளி, உப்பு, கறிவேப்பிலை மற்றும் வறுத்து வைத்துள்ள பொருட்கள் ஆகியவற்றை சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயம், சிறிது கறிவேப்பிலை தாளித்து பின் அரைத்த விழுதையும் சேர்க்கவும்.

மேலும் சிறிது நீர் சேர்த்து மூடிப் போட்டுக் கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து சுருண்டு வந்தவுடன் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து இறக்கவும்.

குறிப்புகள்:

சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.