புதினாச் சட்னி
0
தேவையான பொருட்கள்:
புதினா - 2 கட்டு
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
உலர்ந்த மிளகாய் - 4
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
மஞ்சள்பொடி - ஒரு சிட்டிகை
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புதினா இலைகளைக் கிள்ளி சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியைக் காயவைத்துப் புதினா இலகைளைப் போட்டு சுமார் மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
வதக்கிய புதினா இலைகளை தனியே எடுத்து வைத்து விட்டு, வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, வெந்தயம் போட்டுத் தாளித்து வதக்கிய புதினா இலைகளுடன் சேர்க்கவும்.
இவற்றுடன் பச்சை மிளகாய், உலர்ந்த மிளகாய், புளி, மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்புச் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்து எடுக்கவும்.