பாம்பே சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

து.பருப்பு - 1 கப்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

காய்ந்த மிளகாய் - 3

தேங்காய் - 1/2 கப்

கடுகு,உளுந்த பருப்பு - தாளிக்க

கரிவேர்பிளை - கொஞ்சம்

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

து.பருப்பை நன்கு காய்ந்த கடாயில் ஒரு 2 நிமிடம் வறுத்து(எண்ணெய் விடாமல்) கருகும் முன் நிறுத்தவும்.

பிறகு அதை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை நீளமாக அரியவும்.

தக்காளி சிறுது சிறிதாக அரியவும்.

து.பருப்பு நன்கு ஊறியதும் கழுவி கொள்ளவும்.

மிக்சியில் து.பருப்பு,தேங்காய்,தக்காளி,காய்ந்த மிளகாய் சேர்த்து சிறுது தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்தம் பருப்பு,கரிவேர்பிளை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த கலவையை ஊற்றவும்.

கொஞ்சம் நீராக வரும் வரை தண்ணீர் சேர்க்க வேண்டும்.

சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்க வேண்டும்.

கிண்டி கொண்டே இருக்க வேண்டும்.

நேரம் ஆகா ஆகா கெட்டி படும்.

பச்சை வாசனை போகும் வரை அடுப்பில் இருக்க வேண்டும்.

பச்சை வாசனை போகும் முன்னே சட்னி கெட்டி ஆகி விட்டால் சிறுது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.

குறிப்புகள்: