பரங்கிக்காய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் - ஒரு துண்டு

காய்ந்த மிளகாய் - 4

உளுந்து - 1/4 கப்

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

புளி - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பரங்கிக்காயின் தோலை நன்கு சீவி எடுத்து அலசி விட்டு நறுக்கிக் கொள்ளவும்.

பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கின பரங்கிக்காய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். கடைசியாக புளி, பெருங்காயம் சேர்த்து லேசாக வதக்கி ஆற வைக்கவும்.

உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

குறிப்புகள்:

இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, நாண் ஆகியவற்றிற்கு தொட்டு கொள்ள நன்றாக இருக்கும்.

பரங்கிகாயை அதிகம் வதக்கினால் அதில் இருக்கும் தாது சத்துக்கள் அழியும் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் மட்டும் நன்கு வதக்கலாம்