நிலக்கடலை சட்னி (3)
0
தேவையான பொருட்கள்:
நிலக்கடலை - 100 கிராம்
மிளகாய் வற்றல் - 2
இஞ்சி - சிறுதுண்டு
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நிலக்கடலையை தோல் நீக்கி விட்டு வாணலியில் நிலக்கடலையையும், மிளகாய் வற்றலையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
இஞ்சியை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பிறகு நிலக்கடலை, மிளகாய் வற்றல், இஞ்சி, வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு பிழியவும்.