நிலக்கடலை சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
நிலக்கடலை (வறுத்து தோல் நீக்கியது) - ஒரு கையளவு
சிவப்பு மிளகாய் வத்தல் - 5
புளி - 1/2 கோலி அளவு
தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - சிறிதளவு
சிறிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1 கப்
செய்முறை:
வாணலியில் புளி, வத்தல், தேங்காய் சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.
மிளகாயின் வாசம் வந்தவுடன் நிறுத்தி சூடு ஆறிய பின் நிலக்கடலைபருப்பை சேர்த்து கலவையை அரைக்கவும்.
பின் வாணலியில் 4 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பின் அரைத்த கலவையை ஊற்றி உப்பு போடவும். நன்கு கலக்கி 5 நிமிடம் கொதிக்கவிடவும்.