தோசக்காய் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசக்காய் - 1/4

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

உளுந்து - 2 தேக்கரண்டி

இஞ்சி - சிறு துண்டு

புளி - நெல்லியளவு

காய்ந்த மிளகாய் - 6 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)

கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, கடலை பருப்பு, உளுந்து, எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தோசக்காயை தோல் சீவி, விதை நீக்கி துண்டுகளாக்கவும்.

எண்ணெய் விட்டு கடலை பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

தோசைக்காயை சேர்த்து நீர் போக வதக்கி, புளி சேர்த்து ஆற விடவும்.

ஆறியவுடன், நன்கு அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களை தாளிக்கவும். சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: