தேங்காய் தக்காளி சட்னி (3)
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1
பொட்டுக்கடலை - ஒரு கைப்பிடி
புளி- ஒரு சிறு நெல்லி அளவு
பச்சை மிளகாய் - 6
கொத்தமல்லி இலை - ஒரு கை
கறிவேப்பிலை - 10 இலைகள்
சிறிய வெங்காயம் (மிகப்பொடியாக அரிந்தது) - 1/2 கப்
பொடியாக அரிந்த தக்காளி - 1 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய்,பொட்டுக்கடலை,புளி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் ஒரு வாணலியை சூடாக்கி எண்ணெயை ஊற்றவும். அதில் கடுகு, உ.பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம், தக்காளி, காயம், கொத்தமல்லியைச் சேர்த்து குழைய வதக்கி அரைத்த சட்னியைச் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.