தேங்காய் தக்காளி சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 3/4 கப்

தக்காளி - 1

வரமிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

தாளிக்க கொடுத்துள்ளவை தவிர மற்றவைகளை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

பின்பு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: