தேங்காய்ப்பூச் சம்பல்
0
தேவையான பொருட்கள்:
தேங்காய்ப்பூ - 1 கப்
செத்தல் மிளகாய் - 6 அல்லது தேவையான காரத்திற்கேற்ப
சிறிய வெங்காயம் - 5
கறிவேப்பிலை - 1 நெட்டு
புளி - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
செத்தல் மிளகாய், சிறிய வெங்காயம், கறிவேப்பிலை என்பவற்றை தனித் தனியே பொரித்து எடுக்கவும்.
உப்பு, தேங்காய்ப்பூ, புளி மற்றும் பொரித்த அனைத்தையும் அரைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இதனை இடியப்பம், புட்டு, ரொட்டி, தோசை என்பவற்றுடனும் சாப்பிடலாம்.