தக்காளி கொத்தமல்லி சட்னி
0
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/2 கிலோ
கொத்தமல்லி - 1 கட்டு
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் துருவல் - 1/2 கப்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
கடுகு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை சுமாராக (பொடியாக அல்ல) நறுக்கவும்.
கொத்தமல்லியை சுத்தம் செய்து, அலசி, பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு,மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கி வெந்ததும், தேங்காய் துருவல், புளி சேர்த்து கிளறி இறக்கவும்.
ஆறியதும் இஞ்சி, உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து கொட்டவும்.
சுவையான சட்னி ரெடி.