சீரக சட்னி (1)
0
தேவையான பொருட்கள்:
சீரகம் - 50 கிராம்
வற்றல் - 5
பெரிய வெங்காயம் - 3
பூண்டு - 4
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிக்ஸியில் சீரகம், புளி, வற்றல் முதலியவற்றை போட்டு மையாக அரைக்கவும்.
வெங்காயம், பூண்டை அம்மியில் வைத்து தட்டி வைத்துக் கொள்ளாவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு தாளித்து அதில் அரைத்தவற்றையும், தட்டி வைத்த வெங்காயம், பூண்டையும் போட்டு கொதிக்கவிடவும்.
அதில் உப்பு, மஞ்சள் தூள் போட்டு ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.
சுவையான சட்னி ரெடி.